ADDED : ஆக 13, 2024 11:55 PM
ராய்ச்சூர் : ராய்ச்சூர் யரமரஸ் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணியாற்றியவர் மெகபூப் அலி, 40. இந்த பள்ளியில் 35 வயது பெண் ஆசிரியையும் பணியாற்றுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆசிரியையின் மொபைல் நம்பரை, மெகபூப் அலி வாங்கி இருந்தார்.
பின், ஆசிரியைக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இது குறித்து ஆசிரியை தனது குடும்பத்தினரிடம் கூறினார். நேற்று காலை பள்ளிக்கு சென்ற ஆசிரியையின் உறவினர்கள், மெகபூப் அலியை பிடித்து தாக்கினர்.
அடி தாங்க முடியாமல் ஆசிரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். மெகபூப் அலியை, 'சஸ்பெண்ட்' செய்து, ராய்ச்சூர் பள்ளிகல்வி துறை இணை இயக்குனர் படிகேரா உத்தரவிட்டுள்ளார்.
ஆபாச குறுந்தகவல் அனுப்பிய அரசு பள்ளி ஆசிரியரை, பாதிக்கப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தினர் அடித்து உதைத்தனர்.

