ADDED : மார் 03, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 2007ல் நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், 206 இடங்களை வென்ற பகுஜன் சமாஜ், 2022ல் நடந்த தேர்தலில் ஒரு இடத்தை மட்டுமே வென்றது. அதேபோல், 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 10 இடங்களை பகுஜன் சமாஜ் வென்றது. கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி ஒரு இடத்திலும் வெல்லவில்லை.
மாறாக, அதற்கு பின் தோன்றிய சந்திரசேகர் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி ஒரு இடத்தை வென்றது. கடந்த சில ஆண்டுகளாகவே இது போன்ற பின்னடைவை பகுஜன் சமாஜ் சந்தித்து வருவதற்கு, தலைமையில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என கூறப்படுகிறது.