ADDED : மார் 06, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: பகுஜன் சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை, கட்சி தலைவர் மாயாவதியின் சகோதரரான ஆனந்த் குமார் ஏற்க மறுத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி. இவரது சகோதரரான, ஆனந்த் குமார் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்த ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து மாயாவதி சமீபத்தில் நீக்கினார்.
இதைத் தொடர்ந்து, தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி ஆனந்த் குமாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால், ஒருவருக்கு ஒரு பதவி கொள்கையை பின்பற்ற விரும்புவதாக தெரிவித்து, ஒருங்கிணைப்பாளர் பதவியை ஆனந்த் குமார் ஏற்க மறுத்தார்.
இதையடுத்து, தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி ரன்தீர் பெனிவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.