ADDED : மார் 11, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்; வெயில் கொளுத்துவதால், தங்கவயலில் ஒரே வாரத்தில் 60 சிறுவர்களுக்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டுள்ளது.
கோடையில் ஏற்படும் அம்மை நோயால், கடந்த ஒரு வாரத்தில் 60க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் முன் காக்க, முறையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுக்கவில்லை. தடுப்பூசி செலுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உடல் சூட்டை தணிக்க தங்கவயலில் தர்பூசணி, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை பழ விற்பனை அதிகரித்துள்ளது.
தர்பூசணி கிலோ 20 ரூபாய்க்கும், சாத்துக்குடி ஆரஞ்சு கிலோ 80 ரூபாய்க்கும், பழச்சாறு ஒரு கப் 30 ரூபாய்க்கும், இளநீர் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.