லட்சங்களில் மருத்துவ 'பில்': 'டாப் ' பில் பா.ஜ., - எம்.எல்.சி.,
லட்சங்களில் மருத்துவ 'பில்': 'டாப் ' பில் பா.ஜ., - எம்.எல்.சி.,
ADDED : ஆக 25, 2024 10:30 PM

பெங்களூரு:
மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், 15 மாதங்களில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு மருத்துவ பில் தொகை பெற்றிருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் மாதத்துக்கு லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, மருத்துவ செலவு, பயணப்படி உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இதை பலரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இது தொடர்பாக, 'பைட்டர்ஸ் போரம்' என்ற அமைப்பின் வெங்கடேஷ், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 2023 மே 1ம் தேதி முதல் 2024 ஜூலை வரை மக்கள் பிரதிநிதிகள், மருத்துவத்துக்கு செலவழித்த தொகை குறித்து கேட்டிருந்தார்.
பா.ஜ., - எம்.எல்.சி., பாரதி ஷெட்டி 48.70 லட்சம் ரூபாய் பெற்று முதலிடத்தில் உள்ளார். பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் 39.64 லட்சம் ரூபாயும்; அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சகோதரர் சன்னராஜ் ஹட்டுஹோளி 7.26 லட்சம் ரூபாயும்;
காங்கிரஸ் எம்.எல்.சி.,யும், முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலருமான கோவிந்தராஜு 7.26 லட்சம் ரூபாயும்; காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி 2.41 லட்சம் ரூபாயும் அரசிடம் இருந்து பெற்றுள்ளனர்.
கர்நாடக காங்கிரஸ் அரசில் ஏற்கனவே மூடா முறைகேடு, வால்மீகி முறைகேடு, எஸ்.சி., - எஸ்.டி., துறை நிதி முறைகேடு என பல பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது ஓராண்டுக்கான மருத்துவ செலவு தொகை, பல லட்சங்களை தொட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லட்சங்களில் பில் தொகை பெற்றவர்கள் பட்டியல்