மனைவி, பாட்டியை கொன்று மருத்துவ ஊழியர் தப்பி ஓட்டம்
மனைவி, பாட்டியை கொன்று மருத்துவ ஊழியர் தப்பி ஓட்டம்
ADDED : ஆக 23, 2024 11:21 PM
ராய்ச்சூர்: மனைவி, பாட்டியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ராய்ச்சூர், லிங்கசகூரின் முத்கல் கிராமத்தில் வசிப்பவர் துருகப்பா, 28. இவர் முதகல் அரசு மருத்துவமனையில் 'டி' குரூப் ஊழியராக பணியாற்றி வந்தார். மருத்துவமனை குடியிருப்பில், இவரது குடும்பத்தினர் வசித்தனர்.
இவருக்கு ஜோதி, 23, என்ற மனைவியும், தியாவம்மா, 66, என்ற பாட்டியும் இருந்தனர். குடும்ப பிரச்னையால், குடும்பத்தில் அவ்வப்போது சண்டை நடக்கும். நேற்று காலையும் வழக்கம் போன்று, துருகப்பாவுக்கும், அவரது மனைவி ஜோதிக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த துருகப்பா, கைக்கு கிடைத்த கட்டை, கத்தியால் மனைவியை கடுமையாக தாக்கினார்.
தடுக்க வந்த பாட்டியையும் தாக்கினார். இதில் மனைவியும், பாட்டியும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதை கண்டு துருகப்பா தப்பியோடி விட்டார்.
சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது, ஜோதியும், தேவம்மாவும் கொலையாகி கிடந்ததை கண்டு, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப் பதிவு செய்து, கொலையாளி துருகப்பாவை தேடி வருகின்றனர்.

