ADDED : ஏப் 18, 2024 04:20 AM
பெங்களூரு : வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், ஓட்டுச்சாவடிகளில் மருத்துவ சிகிச்சை வசதி செய்யும்படி, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரத் துறை கமிஷனர் ரண்தீப் வெளியிட்ட சுற்றறிக்கை:
கர்நாடகாவில் இரண்டு கட்டங்களில் லோக்சபா ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்பத்தால் மக்களின் ஆரோக்கியம் பாதிப்படையும் அபாயம் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, ஓட்டுச்சாவடிகளில் அவசர சிகிச்சை வசதி செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைக்க வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்களை வைத்திருப்பது அவசியம். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஓ.ஆர்.எஸ்., திரவம் வழங்க வேண்டும்.
வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து, தங்களை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டிய வசதிகள் குறித்து, துண்டுப் பிரசுரங்கள் மூலமாக, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

