sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரில் வரும் 21ம் தேதி  கர்நாடக தமிழர் சந்திப்பு கூட்டம்

/

பெங்களூரில் வரும் 21ம் தேதி  கர்நாடக தமிழர் சந்திப்பு கூட்டம்

பெங்களூரில் வரும் 21ம் தேதி  கர்நாடக தமிழர் சந்திப்பு கூட்டம்

பெங்களூரில் வரும் 21ம் தேதி  கர்நாடக தமிழர் சந்திப்பு கூட்டம்

4


ADDED : ஜூன் 19, 2024 06:05 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 06:05 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : கர்நாடக தமிழர் சந்திப்பு கூட்டம் பெங்களூரில் வரும் 21ம் தேதி நடக்கிறது. கர்நாடகாவில் பல நுாற்றாண்டுகளாக தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழக வளர்ச்சிக்கும், கர்நாடக வளர்ச்சிக்கும் அவர்களின் பங்கு அதிகம்.

கர்நாடகாவில் தமிழையும், தமிழர்களின் நலனையும் பாதுகாப்பதில், பல்வேறு தமிழ் அமைப்புகள் இயங்கி வருகின்றன.

சமீப காலமாக, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் பல்வேறு வகையில் அயலக தமிழர்களுக்கு உதவி வருகிறது.

ஆனால், அயலக தமிழர்களுக்கான தமிழக அரசின் எந்த திட்டமும், கர்நாடக தமிழர்களுக்கு கிடைக்காமல் உள்ளது.

இந்த வகையில், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள இன்ஸ்டிடுயூஷன் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்ஸ் அரங்கில், வரும் 21ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 3:30 மணி வரை, 'கர்நாடக தமிழ் சந்திப்பு' கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரக கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.

கர்நாடகாவில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம்.

கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், https://forms.gle/BcahbQRYoCXxwBAE7 என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவலுக்கு, 63631 18988 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us