ADDED : ஆக 30, 2024 09:49 PM

பெலகாவி : ''எனக்கு வாய்ப்பு கிடைத்தால், விவசாயத் துறை அமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது,'' என, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் விவசாயியின் வீட்டில் பிறந்து, வளர்ந்தவள். ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இப்போது மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சராக, பெண்களுக்காக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
வரும் நாட்களில் வாய்ப்பு கிடைத்தால், விவசாயத்துறை அமைச்சராக பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உள்ளது. விவசாயிகளின் கஷ்டம் எனக்கு தெரியும். அவர்களுக்கு மழைக்காலம், கோடைக்காலம், குளிர்காலம், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என, அனைத்தும் ஒன்றுதான். விவசாயிகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என, நான் விரும்புகிறேன்.
காங்கிரஸ் எப்போதும், ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கும். இவர்களுக்காகவே ஐந்து வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால் மத்திய அரசு, செல்வந்தர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்தது.
இவ்வாறு அவர்கூறினார்.