'பாவத்தை போக்க பாதயாத்திரை' அமைச்சர் சிவராஜ் தங்கடகி விமர்சனம்
'பாவத்தை போக்க பாதயாத்திரை' அமைச்சர் சிவராஜ் தங்கடகி விமர்சனம்
ADDED : ஆக 03, 2024 11:25 PM

கொப்பால்: ஆட்சியில் இருக்கும்போது, ஊழல் செய்து சேர்த்த பாவத்தை போக்க, பா.ஜ., பாதயாத்திரை நடத்துவதாக, அமைச்சர் சிவராஜ் தங்கடகி விமர்சித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் சிவராஜ் தங்கடகி, கொப்பாலில் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., ஆட்சியில் போவி மேம்பாட்டு ஆணையத்தில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை சரியாக விசாரணை நடத்தவில்லை. பா.ஜ., ஆட்சியில் தான் மாநிலத்தில், ஊழல் தலைவிரித்தாடியது.
அவர்கள் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி ஏன் பேசுவது இல்லை? தங்களை நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ள, பாதயாத்திரை நடத்துகின்றனர். அவர்கள் நடிப்பு, மாநில மக்களிடம் செல்லுபடி ஆகாது.
ஊழல் செய்து சேர்த்த பாவத்தை போக்க, பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இன்னும் சில நாட்களில் அவர்களின் சாயம் வெளுத்துவிடும். சித்தராமையா மக்களுக்கான முதல்வர். அவரை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று, மாநில மக்கள் நினைக்க மாட்டார்கள்.
முதல்வர் இருக்கையும் தற்போது காலியாக இல்லை. யாத்கிர் எஸ்.ஐ., பசவராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் பேசுகின்றனர். விசாரணையில் உண்மை வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.