ADDED : மார் 31, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல், ; கோலார் லோக்சபா தொகுதி வேட்பாளர் ம.ஜ.த.,வின் மல்லேஸ் பாபு,பா.ஜ.,வின் எம்.பி., எஸ்.முனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கோலார் லோக்சபா தேர்தலில்,போட்டியிடம.ஜ.த., வேட்பாளர் மல்லேஸ்பாபு நேற்று முன்தினம் தேசியத்தலைவர் தேவகவுடாவிடம் 'பி பாரம்' பெற்றார். அவரது காலில் விழுந்துஆசிபெற்றார்.
அதை அடுத்து, நேற்று கோலாரில் பா.ஜ.,வின் எம்.பி., முனிசாமியை சந்தித்து கட்டித் தழுவி
வாழ்த்துப் பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு ஆதரவு கோரினார்.
“எங்களது ஒரே நோக்கம் அடுத்தும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தான்.அதற்காக கோலார் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது எங்களின் கடமை.
ம.ஜ.த., வேட்பாளரை ஆதரித்து அனைத்து சட்டசபை தொகுதியிலும் பிரசாரம் செய்வேன்,” என, முனிசாமி தெரிவித்தார்.

