ADDED : மே 07, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாசன்: ஒரு வாரமாக வீட்டுக்குள் அடைந்து கிடக்கும், பவானி ரேவண்ணாவுக்கு ம.ஜ.த., தலைவர்கள், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியான பின், பெரும் பரபரப்பான சூழ்நிலை உருவானது. அதன்பின் பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் ரேவண்ணா கைதானது, பிரஜ்வல் வெளிநாட்டில் பதுங்கியிருப்பது போன்ற சம்பவங்களால், பவானி ரேவண்ணா மனமுடைந்துள்ளார். ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை.
தர்ம சங்கடத்தால் பொது இடங்களிலும் தென்படுவது இல்லை. நேற்று காலை ஷ்வரண பெலகோளா எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தலைமையிலான ம.ஜ.த., தலைவர்கள், ரேவண்ணாவின் வீட்டுக்கு சென்று, பவானிக்கு ஆறுதல் கூறினர். ரேவண்ணா மீதான குற்றச்சாட்டு, பிரஜ்வல் வெளிநாட்டில் இருப்பது, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, பவானியுடன் ஆலோசனை நடத்தினர்.