தாத்தா, பாட்டிக்கு மன வலி ம.ஜ.த.,வின் நிகில் வருத்தம்
தாத்தா, பாட்டிக்கு மன வலி ம.ஜ.த.,வின் நிகில் வருத்தம்
ADDED : மே 04, 2024 11:03 PM

பெங்களூரு: ''என் தாத்தாவும், பாட்டியும் மிகவும் மன வலியில் உள்ளனர். அந்த வீடியோக்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை,'' என, அவர்களின் பேரனும், ம.ஜ.த., இளைஞர் அணி தலைவருமான நிகில் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
நடந்த சம்பவங்களால், என் தாத்தாவும், பாட்டியும் மிகுந்த மன வலியில் உள்ளனர். குறிப்பிட்ட அந்த வீடியோக்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. எனக்கு நெருக்கமானவர்கள் கூறியபடி, அந்த வீடியோக்கள் தெளிவாக உள்ளன. அதில் உள்ள பெண்களின் முகத்தை மறைக்காமல், சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளனர். இது உண்மையில் வருத்தமான விஷயம்.
ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையும் நடக்கிறது. சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல. விசாரணை கட்டத்தில் இருப்பதால், நான் அதிகம் பேச விரும்பவில்லை.
ஹாசன் விஷயத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹாசனாம்பா உற்சவத்துக்கு சென்று வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.