ADDED : ஏப் 30, 2024 07:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாத்கிர்: பெங்களூரில் இருந்து ராய்ச்சூருக்கு நேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். பாதுகாப்பு கார் பின்னால் சென்று கொண்டிருந்தது.
ராய்ச்சூரின் ஹூனசகி அருகே சென்றபோது, பாதுகாப்பு காரின் பின்பகுதியில் 'ஷிப்ட்' கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பாதுகாப்பு கார், சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. பைரதி பசவராஜ், உடனடியாக காரை நிறுத்தி, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

