தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தாக்குதல் வழக்கில்  எம்.எல்.ஏ.,வின் சகோதரர் கைது 

தாக்குதல் வழக்கில்  எம்.எல்.ஏ.,வின் சகோதரர் கைது 

தாக்குதல் வழக்கில்  எம்.எல்.ஏ.,வின் சகோதரர் கைது 


ADDED : ஜூன் 24, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2024 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீதர், : கல்வி நிறுவனம் செயல்பாடு குறித்து கேள்வி கேட்டவரை தாக்கிய வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., சித்தலிங்கப்பா பாட்டீல் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீதர் ஹும்னாபாத் தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., சித்தலிங்கப்பா பாட்டீல். இவரது சகோதரர்கள் சுனில் பாட்டீல், சந்தோஷ் பாட்டீல். இவர்கள் இருவரும், கல்வி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பசவராஜ் என்பவர், சுனில், சந்தோஷிடம் கேள்வி எழுப்பினார்.

இதனால் பசவராஜை, கடந்த 18 ம் தேதி இருவரும் தாக்கினர். ஹும்னாபாத் போலீசில், இருவர் மீதும் வழக்கு பதிவாகி இருந்தது. இருவரும் தலைமறைவாகினர்.

இந்நிலையில் மஹாராஷ்டிராவின் திரிம்பகேஸ்வரில், நேற்று முன்தினம் இரவு, சுனில் கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us