சிவகுமார் முதல்வராக வேண்டும் எம்.எல்.சி., புட்டண்ணா விருப்பம்
சிவகுமார் முதல்வராக வேண்டும் எம்.எல்.சி., புட்டண்ணா விருப்பம்
ADDED : மே 25, 2024 10:42 PM

ராம்நகர், ''பின் வாசல் வழியாக வந்தவர்களை முதல்வராக்கினோம். எங்கள் ஊரின் சிவகுமார் முதல்வராக வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., புட்டண்ணா விருப்பம் தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று அவர் கூறியதாவது:
பின் வாசல் வழியாக வந்தவர்கள், யார், யாரையோ முதல்வராக்கி உள்ளோம். அவர்களின் பெயரை கூற, நான் விரும்பவில்லை. சிவகுமார் எங்கள் வீட்டு மகன்; எங்கள் ஊரை சேர்ந்தவர். இவர் முதல்வராக வேண்டும். ஆனால் இதுகுறித்து, நாங்கள் முடிவு செய்ய முடியாது. எங்களுக்கு மேலிடம் உள்ளது.
நாளையே சிவகுமாரை மேலிடம் முதல்வராக்கலாம் அல்லது வேறு யாரையாவது முதல்வராக்கலாம். ஆனால் என்றாவது அவர் முதல்வர் ஆவார். நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே, அவர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் 25 தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெறும். வாக்குறுதித் திட்டங்கள் கட்சியின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். கர்நாடகாவில் ஒன்பது ஆண்டுகள், காங்கிரஸ் அரசு இருக்கும். வாக்குறுதித் திட்டங்கள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.