ADDED : மார் 26, 2024 06:33 AM
மைசூரு: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், ஓட்டு பதிவு குறித்து மைசூரு மாவட்ட நிர்வாகம் மாறுபட்ட முறையில், விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் இரண்டு கட்டங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு, ஏப்ரல் 26ல், இரண்டாம் கட்ட ஓட்டு பதிவு, மே 7ல் நடக்கவுள்ளது.
இம்முறை ஓட்டு பதிவு சதவீதத்தை அதிகரிக்க, மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
மைசூரு மாவட்ட நிர்வாகம், புதுமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. மைசூரு அரண்மனை முன் பகுதியில் உள்ள, கோட்டே ஆஞ்சனேயர் சுவாமி கோவில் வளாகத்தில், ஓட்டு பதிவு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் கிடார், வீணை, சாக்சபோன், மத்தளம் வாத்தியங்கள் இசைத்து, மக்கள் மகிழ்விக்கப்பட்டனர்.
போலீஸ் பேன்ட் செட் குழுவினரும் கிடார், வீணை வாசித்தனர். வாத்தியங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிவில், ஓட்டுப்பதிவு உறுதிமொழி எடுத்தனர்.

