வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்த மோடி: மத்திய அமைச்சர் சவுகான் பாராட்டு
வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்த மோடி: மத்திய அமைச்சர் சவுகான் பாராட்டு
ADDED : ஜூன் 30, 2024 05:42 PM

புதுடில்லி: வாழ்க்கையை தேசத்திற்காக பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, 3வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று (ஜூன் 30) 111வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். இது தொடர்பாக, நிருபர்கள் சந்திப்பில் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: பிரதமர் மோடி இன்று வானொலி மூலம் கலாசாரம் குறித்து, மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார்.
தனது குடும்பம்
முழு நாடும் தனது குடும்பம் என்று அவர் நம்புகிறார். தனது வாழ்க்கையை தேசத்திற்காக பிரதமர் மோடி அர்ப்பணித்து உள்ளார். அவர் மன்கி பாத் நிகழ்ச்சியில் நாட்டில் நடக்கும் நல்ல பணிகள் குறித்து விளக்கினார். மக்கள் பணி செய்ய எங்களை அவர் ஊக்குவிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.