மோடி பிறந்த நாள்: அஜ்மீர் தர்காவில் 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
மோடி பிறந்த நாள்: அஜ்மீர் தர்காவில் 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
ADDED : செப் 12, 2024 08:47 PM

புதுடில்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் அன்று, ராஜஸ்தானில் உள்ள
அஜ்மீர் தர்காவில், 4,000 பேருக்கு சைவ உணவு சமைத்து அன்னதானம் செய்ய
இருப்பதாக தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாரசீக
நாட்டு சூபி துறவியான குவாஜா மொய்னுதீன் சிஷ்டி, 1192 முதல் 1236ம்
ஆண்டு வரையில் ராஜஸ்தானின் அஜ்மீரில் வசித்தார். அவரது மறைவுக்கு
பின், அந்த இடத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு,
அனைத்து மதத்தவரும் வந்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில்,
பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாள் வரும் 17ம் தேதி
கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தில், அஜ்மீர் தர்காவில் உள்ள,
'பிக் ஷாஹி தேக்' என்றழைக்கப்படும், உலகின் மிக பிரமாண்ட சமையல்
பாத்திரத்தில் 4,000 பேருக்கு சைவ உணவு சமைத்து அன்னதானம் செய்ய
உள்ளதாக, தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

