காஸ் சிலிண்டர் வெடித்து 10க்கும் மேற்பட்டோர் காயம்
காஸ் சிலிண்டர் வெடித்து 10க்கும் மேற்பட்டோர் காயம்
ADDED : ஜூன் 22, 2024 04:26 AM
கலபுரகி : கலபுரகியில், ஹோட்டல் ஒன்றில் சமையல் காஸ் சிலிண்டர் வெடிதத்தில், 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலபுரகி நகரின் அப்பகெரே அருகே, 'சப்தகிரி' என்ற தனியார் ஹோட்டல் உள்ளது. மூன்று மாடிகள் கொண்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது. நேற்று காலை, வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென, காலை 6:30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் காயமடைந்தனர். இவர்களில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டதால், மாவட்ட பொது மருத்துவமனையின் பொது வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஸ் சிலிண்டர் வெடித்ததால், கட்டத்தின் பல பகுதிகள் சேதமடைந்தன. ஹோட்டல் மேஜைகள், பொருட்கள் சிதறின. 1 கி.மீ., துாரம் வரை இந்த வெடி சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், விரைந்து தீயை அணைத்தனர்.
வாடிக்கையாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

