திருமணத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 100க்கு மேற்பட்டோர் 'அட்மிட்'
திருமணத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 100க்கு மேற்பட்டோர் 'அட்மிட்'
ADDED : மே 07, 2024 06:32 AM

ராம்நகர்: திருமண வீட்டில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராம்நகர் மாவட்டம், சென்னபட்டணாவை சேர்ந்த வாலிபருக்கும், மாகடியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மதிய உணவுடன் ஐஸ்கிரீமும் வழங்கப்பட்டது.
இதை சாப்பிட்டவர்களுக்கு மாலையில் வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக மாகடி, சென்னபட்டணா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கூடுதல் சிகிச்சை வேண்டியவர்கள், ராம்நகர், மாண்டியா மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறையினர், சுகாதார துறையினர் திருமணம் நடந்த மண்டபத்தில் சமையல் அறையை ஆய்வு செய்தனர். பின், அங்கிருந்து உணவு, ஐஸ்கிரீம்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக, சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.