sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் தமிழர்கள்: ஷிவமொகா எம்.பி., ராகவேந்திரா நெகிழ்ச்சி

/

மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் தமிழர்கள்: ஷிவமொகா எம்.பி., ராகவேந்திரா நெகிழ்ச்சி

மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் தமிழர்கள்: ஷிவமொகா எம்.பி., ராகவேந்திரா நெகிழ்ச்சி

மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் தமிழர்கள்: ஷிவமொகா எம்.பி., ராகவேந்திரா நெகிழ்ச்சி

1


ADDED : மே 01, 2024 08:22 AM

Google News

ADDED : மே 01, 2024 08:22 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவில் இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முதல் உள்ளூர் தலைவர் வரை சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் 7ம் தேதி தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில், வி.வி.ஐ.பி., தொகுதியான ஷிவமொகாவும் ஒன்று. ஏனென்றால், இந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திரா, பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர், இத்தொகுதியில் மூன்று முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ளார். தற்போது, நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.

ஷிவமொகாவில் நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

* கே: ஷிவமொகாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். மூன்று முறை எம்.பி.,யாகி உள்ள நீங்கள் தமிழர்களின் நலனுக்கு என்ன செய்தீர்கள்?

ப: எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போது, நேரில் சென்று நலம் விசாரித்தார். முந்தைய அரசால், பெங்களூரில் 18 ஆண்டுகளாக கோணிப்பையால் திருவள்ளுவர் சிலை மூடப்பட்டிருந்ததை, எடியூரப்பாவின் தீவிர முயற்சியால் திறந்து வைக்கப்பட்டதை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்.

இதே போன்று, சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அந்த அற்புதமான நிகழ்வை என் வாழ்நாளில் பார்த்ததை மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். இதன் மூலம், தமிழர் - கன்னடர் நல்லிணக்கம் மேலும் மேம்பட்டுள்ளது. சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

ஷிவமொகாவின் குட்டேக்கல் பாலசுப்பிரமணியம் கோவில் திருவிழாவை, ஆண்டுதோறும் தமிழர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். சமுதாய பவன் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரின் புகழை உலகெங்கும் பரப்புவதாக பா.ஜ.,வின் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி, சென்ற இடமெல்லாம் பேசி வருகிறார். மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் தமிழர்கள். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு, பக்தர்களை இலவச பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

* கே: நரேந்திர மோடி, மூன்றாவது முறை பிரதமராக வேண்டும் என்று பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஏன்?

ப: மோடி முதல் முறை பிரதமர் ஆன போது, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த தவறுகளை சரி செய்தார். இரண்டாம் முறை பிரதமர் ஆன போது, நாடு முழுதும் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு சிறந்த நிர்வாகம் செய்தார். தற்போது, நாட்டில் உள்ள பல சவால்களை தீர்த்து, இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், ஏழைகள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கு மோடி மூன்றாம் முறை பிரதமர் ஆக வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் யாருமே இருக்க கூடாது என்பது மோடியின் கனவு. அந்த கனவு நனவாக, பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

* கே: தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.ஜ.த., இணைந்துள்ளதால் என்ன பயன் கிடைத்துள்ளது?

ப: இதுவரை நடந்த தேர்தல்களில், காங்கிரஸ் - ம.ஜ.த., இணைந்து, பா.ஜ.,வுக்கு எதிராக அரசியல் செய்தது. ஆனால், காங்கிரஸ் அல்லாத கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுங்கள் என்று மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, ம.ஜ.த.,வினர் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதன் மூலம், பா.ஜ.,வுக்கு யானை பலம் வந்துள்ளது.

* கே: உங்கள் கட்சியில் இருந்த மூத்த தலைவர் ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி...?

ப: நானும், பா.ஜ., அரசும் செய்துள்ள வளர்ச்சி பணிகள் வாக்காளர்களுக்கு நன்கு தெரியும். தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்பட மாட்டேன். கொரோனா காலத்தில் உலகமே தவித்து கொண்டிருந்த போது, உள் நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்து, செலுத்தி மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டன. எனவே நான் வெற்றி பெறுவது உறுதி. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

* கே: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தங்களை ஆதரித்து ஷிவமொகாவில் பிரசாரம் மேற்கொண்டது, தங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமா?

ப: அண்ணாமலை, 'கர்நாடகாவின் சிங்கம்'. ஐ.பி.எஸ்., அதிகாரியாக கர்நாடகாவில் அவரது செயல்பாடு மக்களுக்கு தெரியும். சில ஆண்டுகளிலேயே நல்ல பெயர் எடுத்தவர். வருங்காலத்தில், தமிழக முதல்வராக பதவி வகிப்பார். அவரது பிரசாரத்தால், தமிழர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரின் ஆதரவும் எனக்கு கிடைத்துள்ளது.

* கே: ஷிவமொகா மக்கள், ராகவேந்திராவுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்?

ப: மோடி, மீண்டும் பிரதமர் ஆகி, நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஷிவமொகாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், மக்கள் எனக்கு ஓட்டு போட வேண்டும். எம்.பி.,யாக நான் செய்த வளர்ச்சி பணிகளை கருத்தில் கொண்டு, மீண்டும் என்னை ஆதரிக்க வேண்டும்.

* கே: தங்கள் தந்தை எடியூரப்பா, சகோதரர் விஜயேந்திரா ஆகியோர் மேற்கொண்ட பணிகள் தங்களுக்கு எப்படி கை கொடுக்கிறது?

ப: நுாற்றுக்கு 100 சதவீதம், அவர்களின் பணிகள் எனக்கு உதவியாக இருக்கும். பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் செய்த வளர்ச்சி பணிகளும் உதவும். அடிமட்டத்தில் இருந்து, கட்சியை வளர்த்த தொண்டர்களின் உழைப்பு, கை விடாது.

......................................

படம்: 1_Arunagiri Shimoga

ஆர்.அருணகிரி

கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் எடியூரப்பா குடும்பம்

ஷிவமொகாவில், தமிழர்களால் நடத்தப்படும் பாரதி கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.அருணகிரி கூறியதாவது:

ஷிவமொகாவில் 2009ல் தமிழர் மாநாடு நடந்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர். அந்த மாநாட்டில், 'குட்டேக்கல் பாலசுப்பிரமணியம் கோவிலுக்கு ஒரு சென்ட் நிலம் மட்டுமே சொந்தமாக இருக்கிறது. கூடுதல் நிலம் தேவை' என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, 3.5 ஏக்கர் நிலம் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமாக வழங்கியது எடியூரப்பா. இதற்காக ஏற்பட்ட செலவை, எம்.பி., ராகவேந்திராவே செலுத்தினார்.

ஷிவமொகா தமிழ்த்தாய் சங்கத்தால் கட்டப்பட்ட திருமண மண்டபத்துக்கு, அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் பெற்று கொடுத்தார். ஷிவமொகா அகமுடி சங்கத்துக்கு 50 லட்சம் ரூபாய்; பத்ராவதி அகமுடி முதலியார் சங்கத்துக்கு 1.25 கோடி ரூபாய் உட்பட தமிழர்களின் வெவ்வேறு சமுதாயங்கள் கட்டிய சமுதாய பவன்களின் கட்டடங்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி பெற்று தந்தவர்.

நள்ளிரவு 12:00 மணிக்கு போன் செய்து நமது பிரச்னையை சொன்னாலும், உடனே அதை தீர்த்து வைக்கிறார். எடியூரப்பா முதல்வராக இருந்த போது, உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா அணிவகுப்பில், திருவள்ளுவர் சிலை இடம் பெற செய்து, தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார்.

எடியூரப்பாவும், அவரது மகன்களும் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். ஏனென்றால், தன்மானத்துடன், சுயமரியாதையுடன் கர்நாடகாவில் வாழ்வதற்கு அவர்களின் பங்கு மிக பெரியாது. உயிர் உள்ள வரை தமிழர்கள், பா.ஜ.,வை மறக்க கூடாது.

பங்காரப்பா முதல்வராக இருந்த போது தான், காவிரி கலவரம் ஏற்பட்டு, லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது கோணிப்பையால் மூடப்பட்ட திருவள்ளுவர் சிலை திறப்பதற்கு, 18 ஆண்டுகள் கழித்து எடியூரப்பா வரவேண்டிதாயிற்று. இன்று தமிழர்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்கு அவர் தான் முக்கிய காரணம்.

அதன்பின் நடந்த பெங்களூரு மாநகராட்சி தேர்தலிலும், ஷிவமொகா மாநகராட்சி தேர்தலிலும் தமிழர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கியது பா.ஜ., தான். அடுத்து வரும் தேர்தல்களிலும் தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், கர்நாடக தமிழர்களுக்கு எடியூரப்பா குடும்பத்தினர் பாதுகாப்பு அரணாக திகழ்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

..........................................

மேல்மருவத்துார் பயணம்

ஷிவமொகாவில் வசிக்கும் தமிழர்கள் சுப்பிரமணியா, முருகன் ஆகியோர் கூறுகையில், 'ஷிவமொகாவில் இருக்கும் தமிழர்கள், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல ராகவேந்திரா இலவச பஸ்களை அனுப்பி வைக்கிறார். அரசு சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் நிதி, பொருள் உதவிகளை செய்து தருகிறார். தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்,'' என்றார்.

...........................................

வளர்ச்சி பணிகள் ஏராளம்

* சிகந்துார் சவுடேஸ்வரி கோவிலுக்கு செல்லும் வகையில், சராவதி ஆற்றுக்கு குறுக்கே 423 கோடி ரூபாயில் கேபிள் தொழில்நுட்பத்தில் 2.44 கி.மீ., துாரத்துக்கு பாலம்

* 450 கோடி ரூபாயில் 1,300 சமுதாய கூடங்கள்

* 2,500 கோடி ரூபாயில் 700 ஏரிகளுக்கு மேலணை திட்டம் மூலம் நீர் நிரப்பும் திட்டம்

* ஷிவமொகாவில் பாஸ்போர்ட் சேவா மையம் அலுவலகம் திறப்பு

* 450 கோடி ரூபாயில் விமான நிலையம் அமைப்பு

* 9,698 நடைபாதை வியாபாரிகளுக்கு 'பிரதமரின் சுயநிதி' திட்டத்தின் கீழ், 20.23 கோடி ரூபாய் நிதியுதவி

* பிரதமரின் ஏழைகளின் நலன் திட்டத்தின் கீழ், 13 லட்சம் பேருக்கு, 550 கோடி ரூபாய் செலவில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன

* பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், ஷிவமொகாவின் 60,573 விவசாயிகளுக்கு, 629.07 கோடி ரூபாய் வழங்கப்பட்டது

* விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஷிவமொகாவில் வாஜ்பாய் உள் விளையாட்டு அரங்கம், ஷிகாரிபுராவில் 3.05 கோடி ரூபாயில் விளையாட்டு மைதானம்; 5 கோடி ரூபாயில் ஷிவமொகாவில் நேரு மைதானம்

* பைந்துாரில் 130 கோடி ரூபாய் செலவில் துறைமுகம்

* 1.08 கோடி ரூபாய் செலவில், மால்குடி ரயில்வே மியூசியம் மேம்பாடு.

**

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us