ADDED : ஆக 10, 2024 06:22 AM
ஷிவமொகா: தனது இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து, தாய் தற்கொலை செய்து கொண்டார்.
ஷிவமொகா ஒசநகர் மட்டிகே கிராமத்தில் வசிப்பவர் ராஜேஷ், 34. இவரது மனைவி வாணி, 32. இந்த தம்பதியின் மகன் சமர்த், 12, சமதா, 6. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி, பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து, உணவு சாப்பிட்டனர்.
பின், ராஜேஷ் ஹாலிலும், வாணியும், பிள்ளைகளும் படுக்கை அறையிலும் துாங்கச் சென்றனர். நள்ளிரவில் துாக்கத்தில் இருந்து எழுந்த வாணி, பிள்ளைகளையும் எழுப்பினார்.
வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிள்ளைகளை பிடித்து கிணற்றில் தள்ளினார். அவரும் கிணற்றுக்குள் குதித்தார். சிறிது நேரத்தில் மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
நேற்று காலை ராஜேஷ் கண் விழித்துப் பார்த்தபோது, மனைவி, பிள்ளைகள் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடினார். அக்கம் பக்கத்தினரிடமும் விசாரித்தார்.
சிறிது நேரம் கழித்து கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது, மனைவியும், பிள்ளைகளும் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு வந்து, மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். பிள்ளைகளை கொன்று, வாணி தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. குடும்ப தகராறு காரணமா என்ற கோணத்தில், ராஜேஷிடம் விசாரணை நடக்கிறது.

