சினிமா பாணியில் ஓடும் லாரியில் கொள்ளை : வீடியோ வைரல்
சினிமா பாணியில் ஓடும் லாரியில் கொள்ளை : வீடியோ வைரல்
ADDED : மே 26, 2024 01:30 AM

போபால்: சினிமா பட பாணியில் ஓடும் லாரியில் பொருட்களை கொள்ளையடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் தேவாஸ்- ஷாஜாப்பூர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு லாரியில் பின்னால் பைக்கில் வந்த மூன்று பேர் லாரியின் பின்புறம் ஏறி தார்பாயை கிழித்து அதில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.
அதன்பிறகு, இருவரும் லாரியில் இருந்து இறங்கி, அந்த நபர்கள் ஓட்டி வந்த பைக் இருக்கையில் இறங்கி அங்கிருந்து தப்பினர். இதனை பின்னால் காரில் வந்து கொண்டிருந்த நபர் தனது மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அது வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தின் மக்சி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.