தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பா.ஜ.,வேட்பாளராகிறார் மும்பை தாக்குதல் அரசு வழக்கறிஞர்

பா.ஜ.,வேட்பாளராகிறார் மும்பை தாக்குதல் அரசு வழக்கறிஞர்

பா.ஜ.,வேட்பாளராகிறார் மும்பை தாக்குதல் அரசு வழக்கறிஞர்


UPDATED : ஏப் 27, 2024 07:34 PM

ADDED : ஏப் 27, 2024 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2024 07:34 PM ADDED : ஏப் 27, 2024 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வல்நிகாம் பா,ஜ, வேட்பாளராக களம் காண்கிறார்

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அன்று மும்பையில் தாஜ் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் ஏராளமானோர் பலியாகினார். இது குறித்த வழக்கில் அரசு தரப்பில் உஜ்வல் நிகாம் என்பவர் வாதாடி வந்தார்.

இந்நிலையில் உஜ்வல் நிகாம் மும்பை வடக்கு மத்திய தொகுதி பா.ஜ.,வேட்பாளராக நிறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொகுதியின் தற்போதைய எம்.பி.,யாக இருந்து வருபவர் பூனம் மகாஜன். இவரது தந்தை பிரமோத் மகாஜன். இவர் கடந்த 2006-ல் தகராறு ஒன்றில் சகோதரர் பிரவீன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கிலும் உஜ்வல்நிகாம் வக்கீலாக இருந்துள்ளார்,

பூனம் மகாஜன் 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மும்பை வடக்கு மத்திய தொகுதியின் எம்.பி.,யாக இருந்துள்ளார். மேலும் பா.ஜ.,வின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவராக இருந்துள்ளார்.

தற்போது பூனம் மகாஜனுக்கு பதிலாக உஜ்வல் நிகாம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us