ஒரு ரூபாய் கட்டணத்தில் 200 அறைகள் மூணாறு சுற்றுலா வழிகாட்டி சங்கம் சலுகை
ஒரு ரூபாய் கட்டணத்தில் 200 அறைகள் மூணாறு சுற்றுலா வழிகாட்டி சங்கம் சலுகை
ADDED : மார் 24, 2024 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:மூணாறில் மார்ச் 27ல் தங்குவதற்கு முதலில் முன்பதிவு செய்வோருக்கு 200 அறைகள் தலா ரூ. ஒன்று கட்டணத்தில் வழங்க உள்ளனர்.
மூணாறில் இரவு சுற்றுலா வழிகாட்டி சங்கம் துவங்கப்பட்டது. 40 உறுப்பினர்கள் கொண்ட சங்கத்தை ஊராட்சி தலைவர் தீபா தொடங்கி வைத்தார். தலைவராக சரவணன், செயலாளராக ஜாய்சன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மார்ச் 27ல் மூணாறில் தங்குவதற்கு வசதியாக முதலில் முன்பதிவு செய்யும் 200 அறைகள் தலா ரூ. ஒன்று கட்டணத்தில் வழங்கப்படும் என சங்க துவக்க விழா சலுகையாக அறிவித்தனர். இதற்கு சங்கம் சார்பில் க்யூ.ஆர். கோடு வெளியிடப்பட்டது. அதன் மூலம் முன்பதிவு செய்து சுற்றுலா பயணிகள்பயன் பெறுமாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

