ADDED : ஆக 18, 2024 02:26 AM

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கண்ணுார் அருகே குடும்பத்தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மலப்புறம் மாவட்டம் வளஞ்சேரியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது. மனைவி செல்மா 30. கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு செல்மா கண்ணூர் மாவட்டம் முழங்குன்று அருகே காக்காயம்காடு பகுதியில் உள்ள தாய் அலிமா 53, வீட்டுக்கு ஐந்து வயது மகன் பஹத்தையும் அழைத்து சென்றார்.
நேற்று முன்தினம் செல்மாவின் தாய் வீட்டுக்கு ஷாகுல் ஹமீது சென்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஆத்திரத்தில் மனைவியை கோடாரியால் வெட்டினார். இதை தடுக்க வந்த மாமியார் அலிமாவையும் வெட்டி சாய்த்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சிறிது நேரத்தில் மனைவி, மாமியார் பலியாயினர். இந்த தாக்குதலில் மகன் பஹத்துக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாகுல் ஹமீதை போலீசார் கைது செய்தனர்.