மக்களுக்காக பக்தியுடன் உழைத்த என் பெற்றோர்கள்: அமேதியில் பிரியங்கா "பிரமிப்பு"
மக்களுக்காக பக்தியுடன் உழைத்த என் பெற்றோர்கள்: அமேதியில் பிரியங்கா "பிரமிப்பு"
ADDED : மே 14, 2024 02:52 PM

லக்னோ: 'மக்களுக்காக பக்தியுடன் உழைத்ததால் என் பெற்றோர்கள் வெற்றி பெற்றனர்' என பிரியங்கா கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: ராஜிவ் பிரதமராக இருந்தபோதும் ஊர் ஊராக நடைபயணம் மேற்கொண்டார். அவர் மக்களின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டார். இது இந்த நாட்டின் பழைய பாரம்பரியம்.
என் பெற்றோர்கள் பொதுமக்களுக்காக பக்தியுடன் உழைத்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர். இன்று அமேதி பசுமை நிறைந்து காணப்படுவதற்கு காரணம், காங்., ஆட்சியில் நீர்ப்பாசனத் திட்டம் துவங்கப்பட்டது. பெரிய தொழில் நிறுவனங்கள் அமேதிக்கு கொண்டு வரப்பட்டன. எதிர்க்கட்சியில் எந்த தலைவரையாவது தேர்ந்தெடுத்தால், ஊழல் செய்யும் பா.ஜ.,வினரை அகற்ற தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டம்
பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்னைகள் தலைதூக்கி உள்ளது. இந்த பிரச்னைகளை சரி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்துள்ளார், என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் மக்களுக்குச் சொல்ல வேண்டும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

