குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 12 பேர் பலி: டாக்டர்களாலேயே கண்டறியமுடியவில்லையா?
குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 12 பேர் பலி: டாக்டர்களாலேயே கண்டறியமுடியவில்லையா?
ADDED : செப் 08, 2024 06:53 PM

புஜ்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலியாகி உள்ளனர்.
குஜராத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடும் மழை பெய்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கட்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட லக்பத் தாலுகாவில் 12 பேர் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நிமோனியா வாக இருக்க கூடும் என கூறப்பட்ட போதிலும் யாராலும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து கட்ச் மாவட்ட கலெக்டர் அமித் அரோரா கூறுகையில், சுகாதாரத்துறையை சேர்ந்த 22 பேர் கொண்ட குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நோய்க்கான மாதிரிகள் பெறப்பட்டு மருத்துவ சேவைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சேகரித்து வருகின்றனர்.
இதனிடையே உள்ளூர் வாசிகள் கூறுகையில், நோயாளிகளுக்கு காய்ச்சல், சளி , இருமல் நிமோனியா மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளது என கூறினர்.
மாவட்ட பஞ்,., உறுப்பினர் மம்ட் ஜங்ஜாட் கூறுகையில் டாக்டர்களால் நோயை துல்லியமாக கண்டறியமுடியவில்லை என கூறினார்.