ADDED : மே 07, 2024 05:37 AM

பெங்களூரு, : அவசர முடிவை எடுக்க வேண்டாம் என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவிடம் அறிவுறுத்தியும், அவர் கேட்கவில்லை, என பா.ஜ., முன்னாள் அமைச்சர் நாகராஜ் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
ஈஸ்வரப்பாவுக்கு சீட் கை நழுவ முன்னாள் முதல்வர் எடியூரப்பா அல்லது விஜயேந்திரா காரணம் அல்ல. அது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய குழுவின் முடிவு. எனவே அவசர முடிவை எடுக்காதீர்கள் என, ஈஸ்வரப்பாவுக்கு நான் போன் செய்து கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் நான் ஏற்கனவே முடிவை எடுத்துவிட்டேன் என்றார்.
பா.ஜ., அரசு இருந்த போது, ஈஸ்வரப்பாவுக்கு பல பதவிகள் கிடைத்தன. மூன்று முறை அமைச்சர் பதவியை நிர்வகித்தார். ஒரு முறை துணை முதல்வராகவும் இருந்தார். ஆனால் இம்முறை லோக்சபா தேர்தலில், தன் மகனுக்கு சீட் கிடைக்காததால், வருத்தமடைந்தார்.
நானும், ஈஸ்வப்பாவும் சம காலத்து அரசியல்வாதிகள். ஆனால் அவர், அரசியலில் அதிகம் வளர்ந்தார். சீட் கிடைக்கவில்லை என்பதால், அவசர முடிவை எடுத்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.