மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்டு மோடியை சந்தித்த நாயுடு
மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்டு மோடியை சந்தித்த நாயுடு
ADDED : ஆக 18, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி கோரி ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திர பாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
டில்லி சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாநில அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி விரைந்து ஒதுக்கிடுமாறு வலியுறுத்தினார்.
பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட மேலும் சில மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். சந்திரபாபு நாயுடு உடன் தெலுங்கு தேச மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உடன் சென்றனர்.