ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி.யாக நளின் பிரபாத் நியமனம்
ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி.யாக நளின் பிரபாத் நியமனம்
ADDED : ஆக 15, 2024 08:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் புதிய டி.ஜி.பி.யாக நளின் பிரபாத் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை டி.ஜி.பி.யாக உள்ள ஆர்.ஆர். சுவைன் பதவி காலம் வரும் செப். 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய டி.ஜி.பி.யாக நளின் பிரபாத் பெயரை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
1992-ம் ஆண்டு ஆந்திர மாநில ஐ.பி.எஸ்., கேடரான நளின் பிரபாத், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புபடை டி.ஜி.யாக உள்ளார்.
தற்போது ஜம்மு-காஷ்மீர் சிறப்பு டி.ஜி.பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். அக்.01-ம் தேதி முதல் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்பார் என மத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.