நந்தினி பாலுக்கு அதிக பணம் வசூலித்தால் லைசென்ஸ் ரத்து
நந்தினி பாலுக்கு அதிக பணம் வசூலித்தால் லைசென்ஸ் ரத்து
ADDED : ஜூன் 29, 2024 11:09 PM

பெங்களூரு: 'நந்தினி பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்' என, கே.எம்.எப். எச்சரித்துள்ளது.
கர்நாடக அரசு, நந்தினி பால் விலையை இரண்டு ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கொந்தளிக்கின்றனர்.
இதற்கிடையில் நந்தினி உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள், பால் பாக்கெட்டுகளை நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, கே.எம்.எப்., எனும் கர்நாடகா மில்க் பெடரேஷன் வெளியிட்ட அறிக்கை:
நந்தினி பார்லர்கள் மட்டுமின்றி, மற்ற கடைகளிலும், நந்தினி பால் விற்கப்படுகிறது. காலை நேரம் தவிர, மற்ற நேரத்தில், குறிப்பிட்ட விலையை விட, சில நந்தினி பார்லர்கள், கடைகளில் அதிக பணம் பெறுவதாக தொடர்ந்து புகார் வருகிறது.
இதற்கு கடிவாளம் போட, கே.எம்.எப்., முடிவு செய்துள்ளது. நிர்ணயித்த விலையை விட, அதிக பணம் வசூலிக்க கூடாது. ஒருவேளை வசூலிப்பது தெரிந்தால், கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.