ADDED : மார் 09, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹசாரிபாக்: ஜார்க்கண்டில் ஹசாரிபாக் மாவட்டத்தின் கேராதாரியில் நிலக்கரி சுரங்கத்தையொட்டி தேசிய அனல் மின் நிலையத்தின் பணிகள் நடக்கின்றன.
இதன் துணை பொது மேலாளராக குமார் கவுரவ், 42, என்பவர் பணியாற்றி வந்தார். ஹசாரிபாக் மாவட்டத்தின் கட்கம்தாக் பகுதியில், குமார் கவுரவ் நேற்று நிலக்கரி சுரங்கத்துக்கு காரில் சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காரை வழிமறித்தனர். பின், குமாரை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்திற்குப்பின், குமார் கவுரவின் கார் டிரைவரும் தலைமறைவானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.