
வாரிசு அரசியலால் ஆபத்து!
நாட்டின் ஜனநாயகத்துக்கு பேராபத்தாக இருப்பது வாரிசு அரசியல். இந்த வாரிசு அரசியலின் பிரதிநிதியாகத் தான் ராகுல் செயல்படுகிறார். தடை செய்யப்பட்ட அமைப்புகள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதும் ஆபத்தான விஷயம்.
நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
மாறி வரும் அரசியல் சூழல்!
நாடு முழுதும் அரசியல் சூழல் மாறி வருகிறது. மக்களின் மனநிலை, 'இண்டியா' கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. வரும் தேர்தலில் இந்த கூட்டணி தனிப் பெரும்பான்மை பெறும். ராஜஸ்தானில் பா.ஜ., வை விட, காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.
சச்சின் பைலட்
முன்னாள் மத்திய அமைச்சர்,
காங்கிரஸ்
செல்வாக்கு இல்லாத கட்சி!
காங்கிரஸ் கட்சி மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டது. தற்போதைய காலத்துக்கு பொருந்தாத கட்சியாக மாறி விட்டது. மதம், ஜாதியின் பெயரில், ஓட்டு வங்கி அரசியல் செய்யும் கட்சியாக திகழ்கிறது.
ராஜ்நாத் சிங்
ராணுவ அமைச்சர்,
பா.ஜ.,

