
மிகப்பெரிய நகைச்சுவை!
ஊழலை துாய்மையாக மாற்றும் மிகப்பெரிய வாஷிங் மிஷின் பா.ஜ.,வுக்கு தேவைப்படுகிறது. அதனால் தான், நவீன் ஜிண்டால், அந்த கட்சிக்கு சென்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில், காங்கிரசுக்காக எதுவும் செய்யாத ஒருவர், தற்போது ராஜினாமா செய்வதாக அறிவிப்பது, மிகப் பெரிய நகைச்சுவை.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச் செயலர், காங்கிரஸ்
மீண்டும் ஹோலி!
எதிர்க்கட்சியினர் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்; வரும் ஜூன் 4ல், மீண்டும் ஒரு ஹோலி பண்டிகையை கொண்டாட நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி என்ற செய்தி, அன்று நாடு முழுதும் எதிரொலிக்கும்.
நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
வாரிசு அரசியல் அல்ல!
எங்கள் கட்சியில் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இது, வாரிசு அரசியல் அல்ல. அந்தந்த தொகுதிகளில் வாக்காளர்கள் யாரை விரும்புகின்றனரோ, அவர்களைத் தான் வேட்பாளராக்குகிறோம்; அவ்வளவு தான்.
சித்தராமையா
கர்நாடக முதல்வர், காங்கிரஸ்

