
பேச்சுக்கே இடமில்லை!
மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருக்கும் வரை, நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் வரை, மத ரீதியிலான இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை அபகரிக்க, பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது.
நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
அக்னிவீர் ரத்து செய்யப்படும்!
மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ராணுவத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 'அக்னிவீர்' திட்டம் ரத்து செய்யப்படும். பெண்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும், 8,500 ரூபாய் செலுத்தப்படும்.
ராகுல்
எம்.பி., காங்கிரஸ்
மலிவான அரசியல் செய்வதா?
இட ஒதுக்கீடு தொடர்பாக ராகுலும், அவரது கட்சியினரும் தொடர்ந்து பொய்யை விதைக்கின்றனர். ராணுவத்துக்கான, 'அக்னிவீர்' திட்டம் பற்றி பொய் செய்திகளை பரப்புகின்றனர். தேர்தல் வெற்றிக்காக மலிவான அரசியல் செய்கின்றனர்.
கங்கனா ரணாவத்
பா.ஜ., வேட்பாளர்,
மண்டி தொகுதி - ஹிமாச்சல்