
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து!
சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக தரம் இறக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு தான் இந்த நிலை. விரைவில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவதற்கு காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி முன்னுரிமை அளிக்கும்.
ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
சென்சஸில் ஓ.பி.சி., தகவல்!
கடந்த, 2021ல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போனது. அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள கணக்கெடுப்பில், எஸ்.சி., - எஸ்.டி.,யின் மக்கள் தொகை குறித்த ஜாதி வாரியான தரவுகள் சேகரிப்பதை போல, ஓ.பி.சி.,யையும் தனியாக கணக்கெடுத்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பை தனியாக நடத்த தேவையில்லை.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச் செயலர், காங்கிரஸ்
50 நாளில் தண்டனை!
நாட்டில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார். இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை 50 நாட்களுக்குள் விசாரித்து தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.
அபிஷேக் பானர்ஜி
லோக்சபா எம்.பி., - திரிணமுல் காங்கிரஸ்

