
கிராமப்புறங்களுக்கு துரோகம்!
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தற்போது 13.3 கோடி பேர் தொழிலா ளர்களாக உள்ளனர். அவர்கள் குறைந்த ஊதியம், குறைந்த வேலை நாட்கள் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இத்திட்டத்திற்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற இந்தியாவுக்கு செய்யும் துரோகம்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
இட ஒதுக்கீடுக்கு எதிரான ராகுல்!
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சந்தித்த பாகுபாட்டை மோடி அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய மாநாட்டு கட்சி, தேர்தல் வாக்குறுதியில் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறது. ராகுல் இதை ஆதரிக்கிறாரா?
அமித் ஷா
மத்திய அமைச்சர், பா.ஜ.,
பாவனை மட்டும் தான்!
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான எந்த திட்டங்களையும் காங்கிரஸ் செயல்படுத்தியது இல்லை; வெறும் பாவனை மட்டுமே செய்துள்ளது. மோடி ஆட்சியில் தேசிய ஓ.பி.சி., கமிஷனுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கிடைத்தது. 'நீட்' நுழைவுத் தேர்வில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,

