ADDED : ஆக 28, 2024 01:01 AM

அழுத்தம் கொடுப்போம்!
ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெறும். மக்கள் நல்ல மனநிலையில் உள்ளனர். எங்கள் கூட்டணி வென்றால், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே துாதரக பேச்சு ஆகியவை குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்.
பரூக் அப்துல்லா
தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
பா.ஜ.,வில் இணைகிறேன்!
கட்சி தலைமையுடனான கசப்பான அனுபவத்திற்கு பின், நான் அரசியலை விட்டு விலக நினைத்தேன். பின் மக்கள் ஆதரவை உணர்ந்து தனி கட்சி துவங்க நினைத்தேன். இறுதியாக, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா மீதான நம்பிக்கையில், பா.ஜ.,வில் வரும் 30ம் தேதி இணைகிறேன்.
சம்பாய் சோரன்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்,
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
பா.ஜ., விளக்க வேண்டும்!
கார்கே குடும்ப அறக்கட்டளைக்கு பெங்களூரு விமான நிலையம் அருகே முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டதாக பா.ஜ., குற்றம்சாட்டுகிறது. அந்த இடத்தில் கார்கே அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. எப்படி அந்த நிலம் முறைகேடாக ஒதுக்கப்பட்டது என பா.ஜ., விளக்க வேண்டும்.
பிரியங்க் கார்கே
கர்நாடக அமைச்சர், காங்கிரஸ்
