
பா.ஜ.,வில் மட்டுமே சாத்தியம்!
அனைத்து கட்சிகளிலும் வாரிசுகள் அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே தலைமைக்கு வர முடியும். மோடியை போல சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களும் நாட்டின் பிரதமராக வரும் ஒரே கட்சி பா.ஜ., மட்டுமே. பா.ஜ.,வில் அனைவருக்கும் சம உரிமையும், வாய்ப்பும் உள்ளது.
நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
பா.ஜ.,வுடன் கூட்டு!
லோக்சபா தேர்தலில் பிரிவினைவாத தலைவர் ரஷீத் எனக்கு எதிராக போட்டியிட்டார். சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடும் கந்தேர்பால் தொகுதியில், சிறையில் உள்ள பர்காதி போட்டியிடுகிறார். டில்லியின் உத்தரவுப்படி சிறையில் உள்ளவர்கள் எனக்கு எதிராக களமிறங்குகின்றனர். அவர்களா உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர்?
ஒமர் அப்துல்லா
தலைவர்,
தேசிய மாநாட்டு கட்சி
வேட்டையாடும் பா.ஜ.,
ஜார்க்கண்டில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுங்கட்சியை குறிவைத்து செயல்படுகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல்பாட்டை முடக்குவதற்காக, அக்கட்சியின் தலைவர்களை பா.ஜ., வேட்டையாட துவங்கியுள்ளது.
ராஜா
பொதுச் செயலர்,
இந்திய கம்யூ.,