தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தேசியம் – பேட்டி

தேசியம் – பேட்டி

தேசியம் – பேட்டி


ADDED : மே 29, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தோல்வியை காட்டுகிறது! ‘நீட்’ தேர்வுக்கான வினாத்தாள்களை கொண்டு செல்ல விமானப் படையை பயன்படுத்துவது மத்திய அரசின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது. ஆயுதப்படைகள், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதற்காகவே தவிர, கல்வி அமைச்சகத்தின் திறமையின்மையை மறைப்பதற்காக அல்ல. சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., சிவசேனா பால் உத்தவ் தாக்கரே கட்சி

கடுமையான குற்றம்! அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவதும், அவர்களின் வாகனங்களை சேதப்படுத்துவதும் கடுமையான குற்றம். இது மீண்டும் நிகழக்கூடாது என்பதே எங்களின் விருப்பமும் கூட. சோதனை குறித்து எங்களுக்கு முன்பே தகவல் அளித்திருந்தால், தேவையான போலீஸ் பாதுகாப்பு மாநில அரசு வழங்கியிருக்கும். வி.டி.சதீசன் கேரள முதல்வர், காங்.,

ஆரோக்கியமான விஷயம்! பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய பல மாநில அரசுகள் குழுக்கள் அமைத்திருப்பது ஆரோக்கியமான விஷயம். பா.ஜ., அல்லாத கட்சி ஆளும் மாநிலங்களிலும் கூட இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என விரும்பும் அங்குள்ள மக்கள், இதற்காக அரசுக்கு அழுத்தம் தர தொடங்கிவிட்டனர். அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய சட்ட அமைச்சர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us