தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதுதனிப்பட்ட உரிமை! கேரள முதல்வர் வி.டி.சதீசன்

கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதுதனிப்பட்ட உரிமை! கேரள முதல்வர் வி.டி.சதீசன்

கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதுதனிப்பட்ட உரிமை! கேரள முதல்வர் வி.டி.சதீசன்


UPDATED : ஜூலை 15, 2026 10:15 PM

ADDED : ஜூலை 15, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 10:15 PM ADDED : ஜூலை 15, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நான் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது என் தனிப்பட்ட உரிமை. இதற்காக, என்னை ஹிந்துத்வா என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. தங்கள் சொந்த கட்சியில் உள்ள பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே, என் அரசியல் எதிரிகள் இதுபோன்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர். வி.டி.சதீசன் கேரள முதல்வர், காங்கிரஸ்

நியாயமற்ற செயல்! அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரம், பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அறக்கட்டளையின் புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அயோத்தி மற்றும் ஹிந்துக்களின் நம்பிக்கையை எதிர்க்கட்சியினர் இழிவுபடுத்துவது நியாயமற்ற செயல். யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,

பயிற்சி களங்கள்! சட்டசபைகள் அரசியல் தலைமைத்துவத்திற்கான பயிற்சி களங்கள். இங்கு, நிகழ்த்தப்படும் உரைகளும், விவாதங்களும் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறி, பல ஆண்டுகளுக்கு ஆய்வு செய்யப்படுகின்றன. ஒரு உறுப்பினர் சட்டசபையில் எவ்வளவு கற்றுக்கொள்கிறாரோ, அந்தளவுக்கு அவரால் சிறப்பாக பங்களிக்க முடியும். ஓம் பிர்லா லோக்சபா சபாநாயகர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us