தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேசியம்

தேசியம்

தேசியம்


ADDED : மே 01, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிலாளர் தின பரிசு! வணிக காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி, தொழிலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர் தின பரிசு வழங்கி உள்ளார். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய மத்திய அரசு, கூடுதல் நிதிச்சுமையை அளித்துள்ளது. இந்த விலை உயர்வால், ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகும். கே.டி.ராமா ராவ் செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி

தவிர்க்க முடியாதது! வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. உலகின் பிற பகுதிகளில் காஸ் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் காஸ் விலை கட்டுக்குள் இருக்கிறது. இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

வீடு வீடாக பிரசாரம்! மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில், நாட்டின் பெண்களை பா.ஜ., தவறாக வழிநடத்துகிறது. அக்கட்சியின் முகத்திரையை கிழிக்க, சத்தீஸ்கர் முழுதும் காங்., சார்பில் வீடு வீடாக பிரசாரம் நடக்கும்; போராட்டங்களும் நடக்கும். பா.ஜ.,வின் இரட்டை வேடத்தையும், மறைமுக திட்டத்தையும் மக்களுக்கு எடுத்துரைப்போம். சச்சின் பைலட் மூத்த தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us