ADDED : மே 09, 2026 11:32 PM
உரிமை பறிப்பு! மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை நீக்கியதன் மூலம், ஏழை மக்களின் வேலைவாய்ப்பு உரிமையை மோடி அரசு பறித்து விட்டது. சமீபத்திய தரவுகளின்படி, வேலை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை, 44 லட்சமாகவும், தொழிலாளர்களின் எண்ணிக்கை, 67 லட்சமாகவும் சரிந்துள்ளது. மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
ஒன்றுபட வேண்டும்! மேற்கு வங்கத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ., அரசுக்கு எதிராக, இடதுசாரிகள், தேசிய கட்சிகள் என, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என, சிந்திப்பதற்கான நேரம் இதுவல்ல. நம் முதல் எதிரி பா.ஜ., தான். அக்கட்சியை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டும். மம்தா பானர்ஜி தலைவர், திரிணமுல் காங்., கட்சி
கண்டனத்துக்குரியது! ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, காவல் துறையை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி வருகிறது. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் அவர் செயல்படுவது முற்றிலும் கண்டனத்துக்குரியது. இது, ஜனநாயகத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தல். ஜெகன் மோகன் ரெட்டி தலைவர், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி
