ADDED : ஜூலை 19, 2026 06:12 PM
விவாதிக்க வேண்டும்! நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி பல்வேறு மாணவர் அமைப்புகள் டில்லியில் அமைதியாக போராடுகின்றன. அவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி தீர்வு காணவேண்டும். இன்று தொடங்கும் பார்லி கூட்டத் தொடரிலும் இது குறித்து விவாதிக்க வேண்டும். நவீன் பட்நாயக் தலைவர், பிஜூ ஜனதா தளம் கட்சி
தவறான தகவல்கள்! வக்ப் சட்டத் திருத்தம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக மக்களிடம் அச்சமூட்டுவதுடன், தவறான தகவல்களையும் பரப்புகின்றன. இது மதம் சார்ந்த பிரச்னை அல்ல; சட்டத்தின் ஆட்சி தொடர்பானது. ராஜிவ் சந்திரசேகர் கேரள மாநில தலைவர், பா.ஜ.,
பகைமை கூடாது! அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு ஒட்டு மொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வினாத்தாள் கசிவு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்தும் இந்த பார்லி கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினரும் ஆளும் கட்சியினரும் பகைமையை மறந்து விவாதிக்க வேண்டும். மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
