
கேலிக்கூத்து!
எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை, மோடி அரசு பறித்துவிட்டது. 'அனைவருக்கும் வளர்ச்சி' என்ற பா.ஜ.,வின் முழக்கத்தை, இந்த செயல் கேலிக்கூத்தாக்குகிறது.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்.,
விஷம பிரசாரம்!
சனாதன தர்மத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தற்போது, நம் நாட்டின் கலாசாரத்தின் மீதான தாக்குதலாக மாறி உள்ளது. நாட்டில் நடக்கும் தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்திப்பதால், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விஷம பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
முக்தார் அப்பாஸ் நக்வி
மூத்த தலைவர், பா.ஜ.,
இந்தியாவுக்கே முன்னுரிமை!
ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என, நாங்கள் நம்புகிறோம். இதில், மத்திய பா.ஜ., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்கா வுக்கு முன்னுரிமை என, டிரம்ப் கூறுவது போல், இந்தியாவுக்கே முன்னுரிமை என, நாமும் கூற வேண்டும்.
பரூக் அப்துல்லா
தலைவர்,
தேசிய மாநாட்டு கட்சி

