
நாடகமாட வேண்டாம்!
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கையெழுத்திடும்படி, டில்லி அரசுக்கு பல முறை வலியுறுத்தப்பட்டது. டில்லி மக்கள் மீது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இத்திட்டத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அதை விடுத்து நாடகமாடக் கூடாது.
மன்சுக் மாண்டவியா
மத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ.,
வேரூன்றி உள்ளது!
வாரிசு அரசியல் என்பது, நாட்டின் கலாசார கட்டமைப்பிற்குள் வேரூன்றி உள்ளது. இது காங்கிரசில் மட்டுமல்ல, மத்தியில் ஆளும் பா.ஜ.,விலும் உள்ளது. இது ஒரு பொதுவான நடைமுறை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
சசி தரூர்
லோக்சபா எம்.பி., - காங்.,
வேடிக்கையாக உள்ளது!
ஊழலை ஒழிப்போம் என கூறி வரும் பா.ஜ., ஊழல்வாதிகளுக்கு கட்சியில் அடைக்கலம் கொடுத்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ஊழல்வாதிகள் எல்லாம், தற்போது அக்கட்சியில் தான் உள்ளனர். ஊழலை ஒழிக்கப் போவதாக பா.ஜ.,வினர் கூறுவது, வேடிக்கையாக உள்ளது.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,

