
அக்கறை இல்லை!
ஓட்டு வங்கி அரசியலுக்காக, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ காங்., ரத்து செய்யவில்லை. நாட்டின் நலன் மீது அக்கட்சிக்கு அக்கறை இல்லை. குடும்பத்துக்காக உழைக்கும் கட்சியாகவே காங்., உள்ளது.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர்,
பா.ஜ.,
வியந்து போவர்!
லோக்சபா தேர்தலில், ஆளும் பா.ஜ.,வின் உண்மை முகம் அம்பலமாகி உள்ளது. ஜூன் 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கக் கூடியதாகவே இருக்கும். காங்., வெற்றியை பார்த்து அனைவரும் வியந்து போவர்.
ஜிதேந்திர சிங்
பொதுச்செயலர்,
காங்கிரஸ்
எஸ்கேப் ஆகும் ராகுல்!
நாட்டில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், நாட்டை விட்டு வெளியேறுவோரில் முதல் ஆளாக இருப்பவர் ராகுல். நுாற்றாண்டில் மிகப்பெரிய நெருக்கடியாக கொரோனா இருந்தது. அந்த சமயத்தில், அவர் எங்காவது தென்பட்டாரா?
யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர்,
பா.ஜ.,

