
ராகுல் ஆபத்தானவர்!
ராகுல் மிகவும் ஆபத்தான மனிதர். அவர் கொடிய விஷம் போன்றவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால், இந்த நாட்டையும் அழித்து விடுவார். வாழ்நாள் முழுதும் ராகுல் எதிர்க்கட்சி வரிசையில் தான் இருப்பார். மக்கள் அவரை தலைவராக்க மாட்டார்கள்.
கங்கனா ரணாவத்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
காலம் முடிவு செய்யும்!
எந்தவொரு நாடும், தன் சொந்த தேவையை நிறைவேற்ற, மற்றொரு நாட்டின் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தினால், அது தன்னை பலவீனப்படுத்திக் கொள்கிறது என அர்த்தம். அரசுக்கு எதிரான புரட்சி சரியா, தவறா என்பதை காலம் முடிவு செய்யும்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
பாதுகாப்பை உறுதி செய்க!
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல் குறித்த செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. அங்கு பதவியேற்றுள்ள இடைக்கால அரசு, ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், பவுத்தர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பிரியங்கா
பொதுச்செயலர், காங்கிரஸ்

